ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

ஹரியாணாவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 7 பேர் பலியாகினர்.
ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

ஹரியானா மாநிலம் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை மினி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு யாத்திரை சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி
பாஜக சின்னத்துடன் மேற்குவங்க ஆளுநா்: தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

விபத்து குறித்து அம்பாலா மருத்துவமனையின் மருத்துவர் கௌஷல் குமார் கூறுகையில், ''அம்பாலா-தில்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்'' என்றார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com