
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைதான தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரை 4 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கேஜரிவாலின் தனி உதவியாளராக இருப்பவா் பிபவ்குமாா். இவா், கேஜரிவால் இல்லத்தில் தன்னை மே 13-ஆம் தேதி தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியிருந்தாா்.
அவரது புகாரின் அடிப்படையில், பிபவ் குமாரை தில்லி போலீஸாா் கடந்த மே 18ஆம் தேதி கேஜரிவால் இல்லத்தில் இருந்து கைது செய்தனா்.
அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிபவ் குமார் கடந்த சனிக்கிழமை முதல் போலீஸ் காவலில் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.