
உத்தரப் பிரதேசத்தின் புல்பூரில் பேசிய மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பிற்படுத்தப்பட்டோர், தலித், முஸ்லீம் சமூகத்தினர் கடந்த 50-60 ஆண்டுகளாக அச்ச உணர்வுடன் வாக்களித்து வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களை அழிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
உத்தரப் பிரதேசத்தின் புல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய ஓவைசி, ’’இதுவரை காங்கிரஸ், சமூகவுடைமை கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சிகளுக்கு வாக்களித்தீர்கள். ஆனால், உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. யாருக்கு வாக்களித்தீர்களோ, அவர்களின் தலைவிதி மாறிவிட்டது. தில்லி, லக்னௌவில் யாரை வெற்றி பெறச் செய்தீர்களோ, அவர்கள் இன்று நம்மை அழிக்க நினைக்கின்றனர்.
கடந்த 50-60 ஆண்டுகளாக அச்ச உணர்வுடன் வாக்களித்து வருகிறோம், அதனால்தான் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. நீங்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது நம்பிக்கை, அதை சரியாகப் பயன்படுத்துங்கள்'' என்றார்.
பிற்படுத்தப்பட்ட, தலித், முஸ்லீம் ஆகியோரின் ஆதரவின் பேரில் ஓவைசின் ஏஐஎம்ஐஎம், பல்லவி படேலின் அப்னா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் 95 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 4.5 லட்சம் வாக்குகளைப் பெற்றது.
மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25-ம் தேதி பதோஹி, சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஜம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.