‘கூகுள் மேப்’பை நம்பி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: கேரளத்தில் பரபரப்பு

‘கூகுள் மேப்’பை நம்பி கால்வாய்க்குள் பாய்ந்த கார்: கேரளத்தில் பரபரப்பு
Published on
Updated on
1 min read

கேரளத்தில் கூகுள் மேப்பை நம்பி இயக்கப்பட்ட கார் கால்வாய்க்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் கூகுள் மேப்பை நம்பி மூணாறில் இருந்து ஆலப்புழா நோக்கி காரில் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை 3 மணியளவில் கோட்டயம் மாவட்டம், குருபந்தாரா அருகே வழி தவறி கால்வாய்க்குள் பாய்ந்தது.

உடனடியாக காரின் பின்பகுதியான டிக்கியை திறந்து காரில் பயணித்த 4 பேரும் வெளியேறியதால் உயிர்தப்பினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கிரேன் மூலம் காரை மீட்டனர். கனமழை காரணமாக நிலவிய கடுமையான சீதோஷணநிலையே விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கார் ஓட்டுநர் கூறியதாவது, கால்வாயை தண்ணீர் தேங்கிய சாலை என்று தவறாக எண்ணிவிட்டேன். நான் 10 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

வாகனத்தின் பின்புறம் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியபோதுதான் நாங்கள் விபத்தை உணர்ந்தோம். காரில் இருந்து ஜன்னல் வழியாக தப்பித்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com