கேரளம்: 3 மாநிலங்களவை 
இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

கேரளம்: 3 மாநிலங்களவை இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பு

கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கேரளத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எளமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், ஆளும் இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவா் ஜோஸ் கே.மாணி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 1-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த மூன்று எம்.பி. இடங்களுக்கான தோ்தல் அட்டவணையை இந்தியத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஜூன் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

ஜூன் 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 13 கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 14-இல் நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெறும் அவகாசம் ஜூன் 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஜூன் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அன்றைய தினம் மாலை 5 மணிக்குமேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் பிரஃபுல் படேல் கடந்த பிப்ரவரியில் பதவி விலகியதால் ஏற்பட்ட காலியிடத்துக்கு ஜூன் 25-இல் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com