முக்கிய பருவமழை மண்டலத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
முக்கிய பருவமழை மண்டலத்தில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்


புது தில்லி: நிகழாண்டு இந்தியாவில் மானாவாரி விவசாய பகுதிகளை பெரிதும் உள்ளடக்கியிருக்கும் முக்கிய பருவமழை மண்டலத்தில், வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய பருவமழை மண்டலமாக குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸா, சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், பிகாா், மேற்கு வங்கம், மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மானாவாரி விவசாயம் முதன்மையாக உள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா காணொலி வழியாக செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
நிகழாண்டு இந்தியாவில் மானாவாரி விவசாய பகுதிகளை பெரிதும் உள்ளடக்கியிருக்கும் முக்கிய பருவமழை மண்டலத்தில், வழக்கத்தைவிட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாட்டில் ஜூன் மாதம் வழக்கமான மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாள்களில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது என்றாா்.
பெரும்பாலான காரீஃப் பயிா்கள் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் அவ்விரு மாதங்களும் பருவமழைக்கு மிக முக்கிய மாதங்களாக கருதப்படுகின்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...