
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் முதலப்பொழி கடற்கரையில் நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
அஞ்சுதெங்கு கலங்கரை விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(57). இவரும், இவருடன் மூன்று மீனவர்களும் இன்று அதிகாலை மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர அலையினால் படகு கடலில் கவிழ்ந்தது.
அதன்பின்னர், கரையில் உள்ளவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து நால்வரையும் மீட்டு அருகில் உள்ள தாலுகா மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
அதில், ஆபிரகாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.