குமரிக்கு பிரதமர் மோடி வருகை: காங்., திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் ஆணையத்தில் புகார்

விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் நடத்தக் தடை கோரி குமரி மாவட்ட திமுக சார்பிலும் புகார் மனு.
குமரிக்கு பிரதமர் மோடி வருகை: காங்., திமுக, மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் ஆணையத்தில் புகார்
படம் | ஏஎன்ஐ

பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி தமது 3 நாள் தியானத்தை வியாழக்கிழமை (மே 30) தொடங்குகிறாா். மூன்று நாள்களும் விவேகானந்தர் பாறையிலுள்ள மையத்திலேயே பிரதமர் மோடி தங்கவிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் மனு அளித்துள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமையும் ஏன்பதை மேற்கோள் காட்டி, அவரது வருகைக்கு தேர்தல் ஆணையம் அனுமதியளிக்கக் கூடாதென காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் நடத்தக் தடை கோரி குமரி மாவட்ட திமுக சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com