
இந்தியா கூட்டணி அறுதி பெரும்பான்மை பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் முடிவுகள் வெளியான 48 மணிநேரத்துக்குள் பிரதமர் யாரென்பதை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் 7-வது கட்டத்துக்கான பிரசாரம் வியாழக்கிழமை நிறைவுறும் நிலையில் பிடிஐக்கு அவர் அளித்த நேர்காணலில், மக்களவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கூட்டணி உறுதியாக பெறும் எனவும் கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சி இயல்பாகவே தலைமைக்குரியதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 272 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவித்தவர், எதிரணியான தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் தேர்தல் முடிவுக்குப் பிறகு தங்களோடு இணையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு கூட்டணி கதவுகள் திறந்திருக்கின்றனவா என்கிற கேள்விக்கு, காங்கிரஸின் உச்ச தலைவர்களான கார்கே, ராகுல், சோனியா ஆகியோர் அதனை முடிவெடுப்பார்கள் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி ஜோடா யாத்திரை தொடங்கிய விவேகாநந்தர் பாறையில் மோடி தியானத்துக்கு செல்வது குறித்து பேசிய ஜெய்ராம் ரமேஷ், ஓய்வுக்கு பிறகு வாழ்க்கை என்னவாக இருக்க போகிறது என்பது குறித்து தியானிக்க அங்கு மோடி சென்றிப்பதாகக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.