இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

‘பலவீனமான மனிதனுக்கும் தைரியத்தைத் தரும் பாதையை உலகுக்குக் காட்டியவர் காந்தி.’
இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடுவதற்கு வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் காந்தி குறித்த படம் வந்த பிறகுதான் முதல்முறையாக காந்தி பற்றி ஆர்வம் எழுந்தது. அந்தப் படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது.” எனத் தெரிவித்திருந்தார்.

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி
திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

பிரதமர் மோடியில் இந்த கருத்தை விமர்சித்து ராகுல் காந்தி விடியோ ஒன்றை வியாழக்கிழமை காலை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி. உண்மை மற்றும் அகிம்சையின் வடிவில், அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்கும் பலவீனமான மனிதனுக்கும் தைரியத்தைத் தரும் பாதையை உலகுக்குக் காட்டியவர். அவருக்கு சான்றிதழ் தேவையில்லை.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஹிந்தி மொழியில் பேசி ராகுல் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:

“உலகத்தை பல்வேறு கோணங்களில் பிரித்துப் பார்ப்பவர்களால் காந்தியை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் கோட்சேவை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கோட்சே வழியைப் பின்பற்றுபவர்கள். காந்தி உலகிற்கு ஒரு உத்வேகமாக இருந்தவர். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஐன்ஸ்டீன் உள்ளிட்ட அனைவரும் காந்தியால் ஈர்க்கப்பட்டவர்கள்.

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சையை பின்பற்றுகிறார்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் வாய்மைக்கும், பொய்க்கும் இடையேயானது. வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையேயானது. வன்முறை செய்பவர்களால் அகிம்சையை புரிந்து கொள்ள முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதன்கிழமை மாலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய 'முழு அரசியல் அறிவியல்' படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com