
பாலியல் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, இன்று (மே 31) அதிகாலை பெங்களூரு வந்தடைந்துள்ளார்.
ரேவண்ணா வருகையையொட்டி பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து பெங்களூரு வந்தடைந்த ரேவண்ணாவை, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறையின் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரேவண்ணாவிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை காணொலியாகப் பதிவு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடா்ந்து, எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது ஏப். 27-ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) கா்நாடக அரசு அமைத்தது. அதைத் தொடா்ந்து, எஸ்.ஐ.டி. தனது விசாரணையைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பாலியல் வழக்கு விசாரணைக்காக அவர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.