மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

ரீமெல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

மிஸோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மூன்று பகுதிகளில் காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வருகின்றன.

ஐஸால் துணை ஆணையர் நசுக் குமார் கூறுகையில்,

மெல்தும் மற்றும் லிமென் மற்றும் ஐபாவ்க் பகுதிகளில் மீட்புப்பணிகள் மற்றும் தேடுதல் பணிகள் தொடங்கியது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் விரைவுப் பதிலளிப்புக் குழு ஆகியவற்றின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களுக்கு யங் மிசோ அசோசியேஷன் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். சுமார் 7 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் ஜஸாலில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டன.

ரீமெல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிஸோரம்: 3வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

மெல்தும் பகுதியில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேரும், ஐஸாலின் தெற்கு புறநகரில் உள்ள லிமெனில் இருந்து 5 பேரும், ஐஸாலில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பால்காவ்ன் கிராமத்தில் 2 பேரும், லுங்சே மற்றும் கெல்சிஹ் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். நிலச்சரிவில் எண்ணற்ற வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பிற பகுதிகளில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிசோரம் முதல்வர் லால்துஹோமா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். ரீமெல் புயலினால் ஏற்பட்ட பேரழிவுகளைச் சமாளிக்க அரசு ரூ.15 கோடி ஒதுக்கியுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறையின் கூற்றுப்படி, திங்களன்று வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தைத் தாக்கிய ரீமெல் புயலின் தாக்கத்தினால் 120க்கும் மேற்பட்ட வீடுகள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்கள் சேதமடைந்துள்ளன.

ஐஸால் நகரில், ரிபப்ளிக் வெங், கானன் வெங், லுவாங்முவல் மற்றும் குலிகாவ்ன் ஆகிய இடங்களில் உள்ள சில கல்லறைகளும் நிலச்சரிவுகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதமடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com