‘மகனே சித்து...’: சித்து மூஸேவாலா தாயாரின் உருக்கமான பதிவு!

சித்து மூஸேவாலாவின் தாயார் எழுதிய உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
‘மகனே சித்து...’: சித்து மூஸேவாலா தாயாரின் உருக்கமான பதிவு!
Published on
Updated on
1 min read

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி பாதுகாப்பை பஞ்சாப் போலீஸாா் தற்காலிகமாக விலக்கிக் கொண்டதையடுத்து, மறுநாளே இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான சிலரை கைது செய்து, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இது குறித்து சித்து மூஸேவாலாவின் தாய் சரண் கௌர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். இந்தப் பதிவி வைரலாகியுள்ளது. அந்தப் பதிவில் கூறியதாவது:

‘மகனே சித்து...’: சித்து மூஸேவாலா தாயாரின் உருக்கமான பதிவு!
நியூயார்க் திரைப்பட விழாவில் சான்யா மல்ஹோத்ராவின் படம்!

மகனே சித்து, உன்னைப் பிரிந்து 730 நாள்கள், 17520 மணி நேரங்கள், 1051902 நிமிடங்கள், 63115200 நொடிகள் ஆகின்றன; உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன். உன்னைப் போல ஒரு மகனை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். நீ எப்போதும் எங்களது இதயத்தில் நீடித்திருப்பாய். உனது நினைவுகள் எப்போதும் இருக்கும். இன்றைய நாள் வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் (மார்ச்.18, 2024) சித்து மூஸேவாலாவின் தாயருக்கு ஐவிஎஃப் முறையில் மற்றுமொரு குழந்தை பிறந்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

‘மகனே சித்து...’: சித்து மூஸேவாலா தாயாரின் உருக்கமான பதிவு!
பணப் பிரச்னை: கேன்ஸ் விருதுக்குப் பிறகு நடிகை கனி குஸ்ருதி உருக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com