

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிறுமி தனது தந்தை, 8 வயது தம்பியைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் அடைத்த நிலையில், சிறுமியை காவல்துறையினர் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கைது செய்தனர்.
19 வயது இளைஞனுடனான உறவை சிறுமியின் தந்தை கண்டித்ததால், தனது தந்தையை கொலை செய்ததாகவும், அதை நேரில் பார்த்த தனது தம்பியும் கொலை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. தப்பியோடிய 15 வயது சிறுமி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது 19 வயது காதலன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இன்னும் தலைமறைவாக உள்ளார்.
ஹரித்வார் காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர டோபல் கூறுகையில், அந்தச் சிறுமி, ஹரித்வாரில் காணப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலையை செய்ய அவரது காதலன் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், திட்டமிட்டு உடல்களை துண்டு, துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.
சிறுமி மத்தியப் பிரதேச காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில் அவரது காதலனை தேடும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.