
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 31) திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் தரிசனத்திற்காகச் சென்றுள்ளார்.
பாஜக அமைச்சர் அமித் ஷா அவரது மனைவி சோனல் ஷாவுடன், இன்று காலை 8 மணியளவில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், இதர பூஜைகளிலும் பங்கேற்றுள்ளார். கோயில் அர்ச்சகர்கள் அமித் ஷாவிற்கு ஒரு நாள்குறிப்பு, ஆயுர்வேத பொருள்கள், லட்டு மற்றும் பிற பொருள்களையும் பரிசாக வழங்கியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்ற நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி வந்து, பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தின் புதுக்கோட்டையில் அமைந்துள்ள கோட்டை பைரவர் கோயிலில் வழிபாடு செய்தார். இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு தோல்வியே ஏற்படாது என்ற நம்பிக்கை வெகுகாலமாக உள்ளது. ஜே.பி. நட்டா, ஹிமாச்சலில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டம் குலதேவி கோயிலுக்குச் சென்றுள்ளார். மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா உஜ்ஜைனையில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். காங்கிரஸ் தலைவர் பிரயங்கா காந்தி ஷிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ததாகவும், மக்கள் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா ஆகியோர் தெளாஸாவில் உள்ள மெஹந்திபுர் பாலாஜி கோயிலில் வழிபாடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.