குஜராத்: நூலகர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடல்

குஜராத்தில் நூலகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துரையாடினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா.
மத்திய அமைச்சர் அமித் ஷா.
Published on
Updated on
1 min read

தனது மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு நூலகத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை மத்திய உள்துறை நன்கொடையாக மித் ஷா வழங்கினார்.

குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அறக்கட்டளைகளால் நடத்தப்படும் நூலகங்கள் மற்றும் அரசு நூலகங்களின் நூலகர்களுடன் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று கலந்துரையாடினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு நூலகத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்: குற்றவாளி போலீஸில் சரண்!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எந்தவொரு நாட்டின் எதிர்காலத்தையும் உருவாக்குவதில் நூலகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நூலகர்களின் முயற்சியால் வரும் நாட்களில் இந்த நூலகங்களில் வாசகர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள பிப்லஜ் கிராமம் அருகே ஜிண்டால் நகர்ப்புற கழிவு மேலாண்மை அமைப்பு நிறுவிய 15 மெகாவாட் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலையையும் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com