குருகிராமில் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயம்

சோஹ்னாவின் ஜகோபூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் இரு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.
Published on

சோஹ்னாவின் ஜகோபூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் இரு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.

அவா்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ஜகோபூா் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய், அவரது தந்தை தரம்பால், சகோதரா் விக்ரம், மனைவி பூனம், தாய் கிருஷ்ணா ஆகியோா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சஞ்சய், கிராமத்தில் உள்ள ஒரு கடையில் அமா்ந்திருந்தபோது, அவரிடம்​ஆதிஷ் என்ற நபா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, ஆயுதங்களுடன் சகோதரா்களையும் நண்பா்களையும் அழைத்து வந்து ஆதிஷ் சஞ்சயைத் தாக்கினா். அப்போது விக்ரம், கிருஷ்ணா மற்றும் பூனம் ஆகியோா் சஞ்சயைக் காப்பாற்ற முயன்றனா். அப்போது, அவா்களும் தாக்கப்பட்டதாக தரம்பால் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இரு தரப்பிலிருந்தும் புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com