
யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தில்லியில் மாசுபட்டால் யமுனை நதியில் கடந்த சில வாரங்களாகவே நச்சு நுரை காணப்படுகிறது. வெள்ளை நிற பனிப்படலம்போல் யமுனை ஆற்றின் மேல் நச்சு நுரை மிதக்கிறது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் இந்த நச்சு நுரை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள்தான் காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது.
அதேநேரத்தில் யமுனை நதியைக் காக்க ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது என பாஜக குற்றம்சாட்டுகிறது.
நச்சு நுரையால் யமுனை ஆற்றின் நீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யமுனையில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட் வேதி பொருள்கள் அதிகம் உள்ளன. இது, பொதுமக்களுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்னைகள் உட்பட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
மோட்டார் படகு மற்றும் நவீன இயந்திரங்கள் உதவியுடன் நுரையை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நுரையை மட்டுப்படுத்தும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வருகிற நவம்பர் 5-8ஆம் தேதி சத் பூஜையின்போது மக்கள் யமுனை நதியில் இறங்குவார்கள் என்பதால் அதற்குள் யமுனை நதியில் உள்ள நச்சு நுரையை அப்புறப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர், பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.