காற்று மாசு: வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! - தில்லி அமைச்சர்

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
Delhi Minister Gopal Rai
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

தில்லியில் தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளையொட்டி வருகிற ஜன. 1, 2025 வரை பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் (அக். 31, நவ. 1) தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. தற்போது வரை அங்கு காற்றின் தரம் மோசமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், தில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தில்லி அரசு இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இவர்களுக்கு அரசியல் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது.

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தில்லி அரசு இரவு, பகலாக வேலை செய்கிறது. மேற்குறிப்பிட்ட பாஜக மாநில அரசுகள் அமைதி காக்கின்றன. இது சரிசெய்யப்பட்டு வேண்டும். அவர்கள் இந்த பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

கடந்த சில நாள்களாக தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் இருக்கிறது. சில பகுதிகளில் 'கடுமை' பிரிவில் இருக்கிறது. அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை.

உத்தர பிரதேசத்தில் வரும் கழிவு நீரால் யமுனை நதியில் நச்சு நுரை ஏற்பட்டுள்ளது. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com