தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சமரசம் ஆனாலும் பாலியல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

சமரசம் ஆனாலும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :7 நவம்பர் 2024, 9:08 am

DIN

புது தில்லி: மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்ட காரணத்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் அளித்த மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்டதால், பாலியல் வழக்கை ரத்து செய்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிகுமார் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்கிறோம், முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றவியல் நடைமுறைகளின்படி, சட்டத்துக்கு உள்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் நிலை குறித்து வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஆண்டு பிறப்பித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

என்ன வழக்கு?

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மனுதாரரும், குற்றவாளியும் சமரசம் செய்துகொண்டுள்ளனர். இது குறித்து குற்றவாளி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடி, வழக்கை ரத்து செய்யுமாறு கோரினார்.

மனுதாரரின் விளக்கத்தை ஏற்று, வழக்கை ரத்து செய்வதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஆனால், இது குறித்து மூன்றாம் நபர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.