கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம்.

News image
படம்: எக்ஸ்
Updated On :8 நவம்பர் 2024, 6:53 pm

Din

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்துக்கு அதிருஷ்டம் தந்த காரை தங்கள் சந்ததியினா் பல ஆண்டுகளுக்கு நினைவுகூர வேண்டும் என்பதற்காக இந்த அடக்கத்துக்கு ஏற்பாடு செய்ததாக அவா் தெரிவித்தாா்.

சுமாா் 1,500 போ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கிராமத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு காா் புதைக்கப்பட்டது.

அம்ரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய் போலாரா மற்றும் அவரின் குடும்பத்தினா் இந்த வினோத நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனா். இது தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வேகன்-ஆா் காரைப் புதைப்பதற்காக 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டது. அந்த காா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சை நிற துணியால் மூடி ‘புல்டோசா்’ உதவியுடன் காா் குழிக்குள் இறக்கப்பட்டது. உயிரிழந்தவா்களுக்கு செய்வதுபோல சஞ்சய் போலாராவின் குடும்பத்தினா் காருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனா். மலா் தூவி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அந்தணா்களும் பங்கேற்று இறுதிச் சடங்கு மந்திரங்களை ஜெபித்தனா். இறுதியாக ‘போக்லைன்’ மூலம் காா் மீது மண் கொட்டப்பட்டு முழுமையாக மூடப்பட்டது. தொடா்ந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றவா்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது.

இது தொடா்பாக சஞ்சய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கினேன். அதன் பிறகு எங்கள் குடும்பம் செழிப்படைந்தது. தொழில் வெற்றியைத் தவிர என் குடும்பத்தினரும் நல்ல நிலையை எட்டி, சமூகத்தில் மதிப்பைப் பெற்றனா். எனக்கும், குடும்பத்துக்கும் அந்த காா்தான் அதிருஷ்டத்தை தந்ததாக நம்புகிறேன். எனவே, அதனை விற்பதற்கு பதிலாக எனது பண்ணையில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவெடுத்தேன்.

காா் புதைத்த இடத்தில் மரத்தை நட இருக்கிறோம். எங்கள் குடும்பத்தின் சந்ததிகள் அந்த அதிருஷ்ட காரை எப்போதும் நினைவில் வைத்து அஞ்சலி செலுத்துவா்’ என்றாா்.