
காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் இன்று(நவ. 9) தொடங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் புரட்சிகரமான பயணத்தில் தெலங்கானா இன்று களமிறங்கியுள்ளது.
மேற்கண்ட நடவடிக்கையின் மூலம், ‘அனைத்து நலிவுற்ற பிரிவினருக்குமான சமூக நீதி’ என்ற நமது தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதி, தெலங்கானாவில் நனவாகப்போகிறது.
இந்நாள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்! அடுத்த தலைமுறைக்கான புத்தாக்க செயல்பாடுகளிலும், சமூக நீதிக்கான கொள்கைகளிலும் இந்தியாவில் நாம்தான் முன்னணி மாநிலம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக வரும் நாள்களில் கடுமையாக உழைப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அதனைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் முக்கிய தோ்தல் வாக்குறுதியாகவும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.