தில்லியில் மிகவும் மோசமான பிரிவில் காற்றின் தரம்!

தலைநகரின் பெரும்பாலான பகுதிகளின் காற்றின் தரநிலை 400ஐ தாண்டியுள்ளது.
தில்லி
தில்லி
Published on
Updated on
1 min read

தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்குச் சென்றுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசும், தில்லி அரசும் எடுத்து வருகின்றது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீடு காலை 7.30 மணி நிலவரப்படி 347 ஆக இருந்தது.

தில்லியின் என்சிஆர் பிராந்தியத்தில் உள்ள மற்ற நகரங்களில், அதாவது ஹரியாணாவின் ஃபரிதாபாத் 165, குருக்கிராம் 302, உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் 242, கிரேட்டர் நொய்டா 30 மற்றும் நொய்டாவில் 237 ஆக இருந்தது.

சராசரியை விட அதிகமாக இருக்கும் நகரத்தில் நேற்று ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றாலும் பாதுகாப்பான விளிம்புகளுக்கு இன்னும் வரவில்லை.

தில்லியின் ஜஹாங்கிர்புரி 409 ஆகப் பதிவானது. தேசிய தலைநகரின் பெரும்பாலான பகுதிகளின் காற்றின் தரநிலை 300 முதல் 400 வரை பதிவாகியது. ஒரு சில பகுதிகளில் 400ஜ தாண்டியது.

தலைநகரில் உள்ள பல பகுதிகள் ஆபத்தான அளவை தாண்டியது. குறிப்பாக ஆனந்த் விஹார் 378ஆகயும், அலிபூர் 397ஐ எட்டியது, அசோக் விஹார் 389ஆகவும், பவானா நகரத்தில் அதிகபட்சமாக 400 ஆகவும், புராரி கிராசிங் 352, மதுரா சாலையில் 316 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் மாசு அளவை கட்டுப்படுத்த, காற்றின் தர மேலாண்மை ஆணையம் மாசுபாட்டைத் தணிக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com