குளிர்காலம்.. அயோத்தி ராமருக்குத் தயாராகி வரும் சிறப்பான கம்பளி ஆடைகள்!

குழந்தை ராமரைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற ஆடை..
அயோத்தி ராமர் சிலை
அயோத்தி ராமர் சிலை
Published on
Updated on
1 min read

குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் அயோத்தி ஸ்ரீ பால ராமருக்கு கம்பளியும், பஷ்மினா சால்வைகளும் அணிவிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த ஜனவரி 22ல் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமாக பிரஷ்திடை விழா நடைபெற்றது.

இந்த நிலையில், ஸ்ரீராமருக்கு காலநிலைக்கேற்றவாறு உடைகளைக் கோயில் நிரவாகம் நிர்வகித்து வருகின்றது. முன்னதாக கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

இதன்படி, குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், ஸ்ரீராமருக்கு கதகதப்பான ஆடைகளை உடுத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20ல் அகான் பஞ்சமி தொடங்குகிறது. அன்று முதல் குழந்தை ராமரைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக கம்பளிகளும், பஷ்மினா சால்வைகளும், இதர குளிர்கால உடைகளை உடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தில்லியைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களால் ஸ்ரீராமருக்கான உடைகளை தயாரித்து வருகின்றனர்.

கூடுதலாக, ராமருக்கு வழங்கப்படும் நைவேத்யமான தயிர்ச்சாதம் பிரசாதத்திற்குப் பதிலாக பாயசம் மற்றும் உலர் பழங்கள் படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை அர்ச்சகர் கூறுகையில்,

காலநிலைக்கு ஏற்ப பால ராமருக்கு உடைகளுடன், உணவுகளும் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் தினசரி சடங்குகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதாவது குளிர்காலம் தொடங்கியவுடன் ராமரை வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டப்படும். கருவறையில் சூடான சூழலைப் பராமரிக்க ஹிட்டர்கள் நிறுவப்படும். கடுமையான குளிர்கால நாள்களில் ராமருக்குச் சூடான காற்று வீசும் கருவியும் பொருத்தப்படும்.

மேலும் கோயிலில் உள்ள ராமரின் மூன்று சகோதரர்கள் மற்றும் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பாரில் வசிக்கும் ஸ்ரீ அனுமருக்கும் குளிர்கால ஆடைகள் உடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பால ராமரின் கருஞ்சிலை உருவம், மைசூருவைச் சேர்ந்த கலைஞரால் தயாரிக்கப்பட்டு, அயோத்தியில் வெகு சிறப்பாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.