ஏக்நாத் ஷிண்டே - மகாராஷ்டிர முதல்வர்
ஏக்நாத் ஷிண்டே - மகாராஷ்டிர முதல்வர்

முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை.. ஏக்நாத் ஷிண்டே!

மகாவிகாஸ் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை என்கிறார் ஏக்நாத் ஷிண்டே
Published on

மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாயுதி கூட்டணிக்குள், முதல்வர் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை, ஆனால், மகா விகாஸ் அகாதி கூட்டணிக்குள் முதல்வர் போட்டிக்கு கடும் போட்டி நிலவுவதாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கிண்டல் செய்துள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், தேர்தல் பிரசாரங்களின்போது, திரண்டு வரும் மக்களைப் பார்க்கும்போது குறிப்பாக பெண் வாக்காளர்களைப் பார்க்கும்போது எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே தான் உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு ஆதரவளிக்க ஏராளமான வாக்காளர்கள் வருகிறார்கள். இப்படியொரு ஆதரவு கிடைப்பதற்கு நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும், மக்களவைத் தேர்தலின்போத, மக்கள் உண்மையான சிவ சேனை யார் என்பதை காட்டிவிட்டார்கள். அதே நிலை சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றார்.

முதல்வர் பதவிக்கு ஏக்நாத் ஷிண்டேவுக்கும், தேவேந்திர பட்னவீஸ்ஸுக்கும் இடையே போட்டி இருப்பதாக வரும் தகவல்களுக்கு பதிலளித்த அவர், மகாயுதியில் எந்த போட்டியும் இல்லை. ஆனால், மகா விகாஸ் அகாதியில்தான் தங்கள் முகத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்று பலரும் முதல்வர் நாற்காலிக்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றார். மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு, தனது முகத்தையே பிடிக்கவில்லை, பிறகு வாக்காளர்களுக்கு எப்படி அவர்களைப் பிடிக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com