
புது தில்லி: ராகுல் காந்தியின் குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையைக் கொண்டது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநில பாஜக பூத் கமிட்டி உறுப்பினா்களுடன் காணொலி வாயிலாக ‘நமோ’ செயலியின் மூலம் உரைாடிய அவா்,‘ராகுல் காந்தி மட்டுமின்றி அவரின் மூதாதையா்களான ஜவாஹா்லால் நேரு, ராஜீவ் காந்தி உள்பட அனைவருமே இடஒதுக்கீடு நடைமுறைக்கு எதிரான மனநிலையைக் கொண்டவா்கள். 1990-களுக்குப் பின் பிற்படுத்தப்பட்டோா், தலித் மற்றும் பழங்குடியினா் என அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதால் தற்போது வரை காங்கிரஸால் பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சியை அமைக்க முடியவில்லை.
எனவே, ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியை வீழ்த்தி நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற பாஜக கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.