காஷ்மீர்: பனியில் சிக்கி நகர முடியாமல் தவித்த வாகனங்கள்! எல்லைச் சாலைகள் அமைப்பினர் மீட்பு

காஷ்மீர்: பனியில் சிக்கி நகர முடியாமல் தவித்த வாகனங்கள்! எல்லைச் சாலைகள் அமைப்பினர் மீட்பு

ஜம்மு காஷ்மீரில் பனிப் பொழிவு.. போக்குவரத்து பாதிக்கப்பட்டது...
Published on

ஜம்மு காஷ்மீரில் பனிப் பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக சாலையில் பனி தேங்கிக் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸாட்கஸ் நல்லா, ராஸ்டான் முனைப் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் நிலையில், அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பனியில் சிக்கி நகர முடியாமல் நேற்று(நவ. 11) நள்ளிரவில் நடுவழியில் ஸ்தம்பித்து நின்றன.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற எல்லைச் சாலைகள் அமைப்பினர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக தேங்கிக் கிடந்த பனியை அகற்றி வாகனப் போக்குவரத்தை சீர் செய்தனர். அவர்களுடன் ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்ட நிர்வாகத்துடன், காவல்துறையும் இணைந்து மீட்புப் பனியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com