பெண்ணாக மாறியது எப்படி? அனுபவத்தை பகிர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் மகன்

பெண்ணாக மாறிய சிகிச்சை குறித்து பகிர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன்
ஆர்யன் - அனயா
ஆர்யன் - அனயா
Published on
Updated on
2 min read

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டதன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார், இப்போது அவர் தன்னை அனயா பங்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார்.

இவர் தனது 10 மாத ஹார்மோன் மாற்று சிகிச்சையின்போது பெற்ற அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

23 வயதான ஆர்யனாக இருந்து அனயாவாக மாறியிருக்கும் இவர், ஹார்மோன் மாற்று சிகிச்சையை தொடங்கியபோதே, அதில் ஏற்படும் அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்துகொண்டார். இருப்பினும் அந்த இடுகை பின்னர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தந்தை சஞ்சய் பங்கரைப் போலவே, அனயாவும் ஒரு இடது கை பேட்டர் ஆவார், லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ஹிங்க்லி கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தான் பெற்ற அனுபவங்கள் குறித்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அனயா, பெண்ணாக முற்றிலும் மாறிவிட்டது, மிகப்பெரிய வெற்றி என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்ட நிலையில், அதில் கூறப்பட்டிருந்தது என்னவென்றால், அதிகாலை முதல், விளையாட்டு அரங்கில், மற்றவர்கள் என்னைப் பார்த்து அவர்களுக்கு ஏற்படும் சந்தேகம், அவர்களாக ஒரு முடிவுக்கு வருவது என்பது முதல் அனைத்தையும் தாண்டி நான் என்னை பலமானவளாக மற்றிக்கொண்டேன். விளையாட்டையும் தாண்டி எனக்கு மற்றொரு பயணமும் இருந்தது, என்னை நான் யார் என்று வெளிப்படுத்துவது, அதில்தான் அதிக சவால்களை சந்தித்தேன்.

நான் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்துவதில் சங்கோஜம் இருந்தாலும், மிகவும் கடினமான தேர்வாகவே என்னை நான் எனக்குப் பொருத்தமான தோற்றத்தில் காட்டிக்கொள்ளவேண்டும் என முடிவெடுத்தேன். நான் யார் என்பதை வெளிப்படுத்தவே விரும்பினேன். ஆனாலும் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஒரு பக்கம் நான் விளையாட்டின் ஒரு அங்கமாக பெருமைப்படுவது போல, நான் என்னை வெளிப்படுத்திக்கொண்டதிலும் மகிழ்ச்சியே. அந்த பயணம் எளிதானது அல்ல, ஆனாலும் எனது உண்மையான அடையாளத்தைத் தேடி அடைந்ததில் கிடைத்திருப்பது மிகப்பெரிய வெற்றி என்று கூறியிருக்கிறார்.

அதேவேளையில், ஹார்மோன் மாற்று சிகிச்சை, தனது கிரிக்கெட் ஆற்றலை எந்த அளவுக்கு மாற்றியது என்ற சோகப் பதிவையும் போட்டுள்ளார். திருநங்கை அல்லது ஹார்மோன் சிகிச்சை பெற்றது, எனது உடலை வெகுவாக மாற்றியது. எனது உடலில் இருந்த வலுவான தசைகளை, பலத்தை இழந்துவிட்டேன். எனது கையிலிருந்து நான் விரும்பிய விளையாட்டு தவறி கீழே விழுவதைப்போல உணர்ந்தேன் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com