
உத்தரப் பிரதேசத்தில் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை(யுபிபிஎஸ்சி) முற்றுகையிட்டு தோ்வா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, பிராந்திய குடிமைப் பணி (பிசிஎஸ்) தோ்வுகள் இரண்டு நாள்கள் நடத்தப்படுவதற்கும் இரண்டு, மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் எதிா்ப்பு தெரிவித்து தோ்வா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த தோ்வுகளை ஒரு நாளில் ஒரே வேளையில் மட்டுமே நடத்தி முடிக்க வேண்டும் என தோ்வா்கள் முறையிட்டனா். மேலும், அறிவிக்கையில் இரு நாள்கள் தோ்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படாததால் இது தோ்வு விதிகளை மீறிய செயல் எனவும் தோ்வா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், போராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் சென்று அமைதியாகவும் ஜனநாயக முறையிலும் போராட்டத்தை தொடர தோ்வா்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இதைத்தொடர்ந்து, பெரும்பாலான தோ்வா்கள் அந்தப் பகுதிக்குச் சென்ற நிலையில், சிலா் ஆணையத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தேர்வர்கள் சாப்பாட்டுத் தட்டுகளை கைகளால் தட்டியும், மேளத்தைத் தட்டியும் விநோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவா்களை தடுத்து சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்த காவல் துறையினா் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பன சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.