
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா அவரது மனைவியுடன் வாக்களித்தார்.
ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அர்ஜுன் முண்டா அவரது மனைவியுடன் வாக்களித்தார். மேலும் மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார், அதேநேரத்தில் தனது கட்சியின் வேட்பாளர் தேர்தலில் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறினார்.
மாநிலத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி கொண்டுசெல்ல வாக்களித்துள்ளேன். கர்சவான் மக்களும் இதே போல் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
வாக்களிப்பது ஒரு அடிப்படை உரிமை, வாக்காளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்று பாஜக தலைவர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.