
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (நவ.13) தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் முதல்கட்டமாக 43 இடங்களில் இன்றும், மீதமுள்ள தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 11 மணி நிலவரப்படி 29.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி குந்தி மாவட்டத்தில் அதிகபட்சமாக 34.12 சதவீத வாக்குகளும், ராம்கர் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவாக 24.17 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
குந்திக்கு அடுத்தபடியாக கும்லாவில் 33.86 சதவீத வாக்குகளும், லோஹர்டகா 33.44%, சிம்டேகா 33.18%, செரைகெல்லா-கர்சவான் 32.65%, கோடெர்மா 31.10%, லதேஹர் 30.59%, கர்வாவில் 30.238 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
இந்தத் தேர்தலில் 609 ஆண்கள், 73 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 43 பேர் என மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.