
நவீன இந்தியாவின் தந்தை ஜவஹர்லால் நேரு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை புகழாரம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், நேருவுக்கு மரியாதை செலுத்தி ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
”நவீன இந்தியாவின் தந்தையும், இந்திய நிறுவனங்களை உருவாக்கியவருமான நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்.
ஜனநாயகம், முற்போக்கான, அச்சமற்ற, தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய நமது இலட்சியங்கள் மற்றும் ஹிந்துஸ்தானின் தூண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.