
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் இத்தாலிய சுற்றுலாப் பயணி கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
இத்தாலியின் டோரினோவைச் சேர்ந்த சியாக்கா மார்கோ, அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மர்ஹீன் எல்லைப் பகுதியில் உள்ள பனியாரி-சக்ரா சாலையில் தனியாக மிதிவண்டியில் அவர் வந்ததைக் கண்ட பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
மார்கோ இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பு பாகிஸ்தான், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சென்று ஜம்முவை அடைந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.