மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்(கோப்புப்படம்)
கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும் வெற்றி பெற்று மகாராஷ்டிரத்தை காப்பாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மகா விகாஸ் அகாடி சுமார் 175 இடங்களை வெல்வார்கள்.

ஒட்டுமொத்த நாடும் மகாராஷ்டிரத்தைப் பின்பற்றுகிறது. மகாராஷ்டிரத்துக்கு முன்மாதிரியாக கர்நாடகம் உள்ளது. கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவில்லை என, மகாராஷ்டிர அரசு விளம்பரம் கொடுத்துள்ளது. உண்மையில், நாங்கள் 5 உத்தரவாத திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

ரூ. 100 கோடியை நெருங்கும் கங்குவா வசூல்!

2023 மே 20 அன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 திட்டங்களையும் செயல்படுத்தினோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தலில் மஹாயுதி ஒரு அணியாகவும், மகா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளன. தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com