முந்தைய அரசுகள் வாக்குவங்கி அரசியலைப் பின்பற்றின: மோடி குற்றச்சாட்டு!

ஹெ.டி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் உரை..
ஹெ.டி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
ஹெ.டி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

புது தில்லி: முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹெ.டி தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கூறியது,

தனது அரசு மக்களால் மக்களுக்காக என்ற மந்திரத்தை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் பல நாடுகளிலுல் அரசு மாறும்போது, இந்தியாவில் மட்டும் மக்கள் மூன்றாவது முறையாக பாஜக தலையிலான மத்திய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

முன்னதாக தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் நடத்தப்பட்டன. மேலும் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்றவாறு கொள்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், எங்கள் அரசு மீது மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளோம்.

மக்களால், மக்களுக்காக முன்னேற்றம் என்ற மந்திரத்தை முன்னிறுத்தி நமது அரசு முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தும் கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட கடந்த 10 ஆண்டுகளில் அதிக எரிவாயு இணைப்புகளை வழங்கினோம். மக்களுக்காகப் பெரிய அளவில் செலவு செய்வதும், மக்களுக்காகப் பெரிய தொகையைச் சேமிப்பதும்தான் எங்கள் அரசின் அணுகுமுறை.

மும்பையில் 26/11 பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளையும் பாதுகாப்பற்றதாக உணரும் காலம் இப்போது மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று நைஜீரியா நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அந்நாட்டு அதிபர் போலா அகமது அழைப்பின்பேரில் பிரதமர் அங்குச் செல்லவிருக்கிறார். பின்னர் பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X