

அகமதாபாத்; குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே விஜபூரைச் சேர்ந்த பிரிஜேஷ் சுதர் இறந்துவிட்டதாக நினைத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்த 5 நாள்களுக்குப் பின் அவர் உயிரோடு திரும்பியதால், குடும்பத்தினர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.
திரும்பியதால் ஆனந்தமும், வேறு யாரோ ஒருவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்திருக்கிறோம் என்பதால் அதிர்ச்சியும் அடைந்தனர்.
அக். 27ஆம் தேதி பிரிஜேஷ் சுதர் (43) காணாமல் போனார். கடுமையான கடன் சுமையில் இருந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றே குடும்பத்தினர் அஞ்சினர். இந்த நிலையில், சபர்மதி ஆற்றில் இருந்து ஒரு சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரிஜேஷ் குடும்பத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
பிரிஜேஷ் குடும்பத்தினரும், அந்த உடலைப் பார்த்து அது பிரிஜேஷ் என்று அடையாளம் சொல்லி வீட்டுக்கு எடுத்துச் சென்று நவ. 10ஆம் தேதி இறுதிச் சடங்குகள் செய்தனர். கிட்டத்தட்ட 5 நாள்களுக்குப் பிறகு, விஜப்பூரில் உள்ள வீட்டுக்கு பிரிஜேஷ் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.
உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனால், பிரிஜேஷ் காணாமல் போன வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் கிடைத்த நபர் யார், எப்படி உயிரிழந்தார் என்பது பற்றிய விசாரணைகள் காவல்துறைக்குத் தலைவலியாக மாறியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.