மோசடிகளை நினைத்து பயப்பட வேண்டாம்! ஆதார் எண்ணை பாதுகாக்க வழி இருக்கு!!

மோசடிகளை நினைத்து பயப்பட வேண்டாம்! ஆதார் எண்ணை பாதுகாக்க வழி இருக்கு!!
ஆதார் பாதுகாப்பு
ஆதார் பாதுகாப்பு
Published on
Updated on
2 min read

ஒவ்வொருவரின் அடையாளமாக மாறிவிட்ட ஆதார் எண்ணை வைத்து பல மோசடிகள் நடப்பதாக செய்திகள் வரும்போது பயப்படுவதால் மட்டும் ஒன்றும் ஆகிவிடாது, நமது ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறையை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

ஒருவரைப் பற்றி ஆதார் எண் அனைத்து விவரங்களையும் வைத்திருக்கும்போது, அது இருந்தால் போதாதா? மோசடியாளர்கள் கையில் ஆதார் எண் கிடைத்தாலும் அதன் மூலம் எந்த மோசடியையும் மேற்கொள்ள முடியாமல் தடுக்கும் வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரது ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய..

முதலில் மை ஆதார் இணைதயளத்துக்குச் செல்ல வேண்டும்.

ஒருவரது ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்சா கோடு சரியாக பதிவிட வேண்டும்.

லாகின் வித் ஓடிபி என்ற வாய்ப்பை கிளிக் செய்து, ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட்டால், ஆதார் எண் விவரத்துக்குள் செல்லும்.

ஆதன்டிகேஷன் ஹிஸ்டரி என்பதை கிளிக் செய்து, அதற்கு அருகே உங்களுக்கு எந்த காலக்கட்டத்துக்குள் விவரங்களை அறிய வேண்டுமோ அதனை தெரிவு செய்ய வேண்டும்.

அப்போது, உங்கள் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஆம் என்றால், யுஐடிஏஐ-க்கு உடனடியாக புகார் அளிக்கலாம்.

அடுத்து, பாதுகாக்க என்ன வழி?

உங்கள் ஆதார் எண்ணை ஏதேனும் ஒரு விஷயத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றால், உங்கள் பயோ மெட்ரிக் பதிவை உள்ளிடுவதை தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பை உதய் வழங்கியிருக்கிறது.

ஆதார் எண்
ஆதார் எண்

அதன்படி ஆதார் சேவைகள் பிரிவில், லாக்/அன்லாக் பையோமெட்ரிக்ஸ் என்ற முறையை தேர்வு செய்து, அதற்குள் ஒருவரது ஆதார் எண் மற்றும் கேப்சா கோட்டை பதிவு செய்து, உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்ய வேண்டும்.

பிறகு, கேப்சா கோடுடன், எனாபில் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் எண் பாதுகாக்கப்பட்டுவிடும். எப்போதாவது, இந்த ஆப்ஷனை விலக்க வேண்டும் என்று நினைத்தால், இதே முறையில், அன்லாக் செய்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com