அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57ஆக உயர்த்த கேரள அரசு ஆலோசனை!

கேரளத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்ந்த கேரள அரசு ஆலோசனை..
பினராயி விஜயன்
பினராயி விஜயன்முதல்வர் பினராயி விஜயன்
Published on
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 57 ஆக உயர்ந்த கேரள அரசு ஆலோசித்து வருகிறது.

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றியமைக்க பல்வேறு அரசுப்பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

புதிய நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் பிப்ரவரியில் மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்யப்படும்போது இந்த அறிவிப்பினை வெளியிடப்படும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்கள் 56 வயதில் ஓய்வுபெறும் ஒரே மாநிலம் கேரளம். உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில்(2011-16) அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, வரன்முறைப்படுத்த ஓய்வு பெறும் வயதை 55 யிலிருந்து 56 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 57 ஆக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

2025 ஆம் ஆண்டின் பிற்பாதியில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.