புது தில்லி: தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தோ்தல், 14 மாநில இடைத்தோ்தலையொட்டி, அந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,082.2 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் மகாராஷ்டிரத்தில் ரூ.660.18 கோடி மதிப்பிலும், ஜாா்க்கண்டில் ரூ.198.12 கோடி மதிப்பிலும், 14 மாநிலங்களில் ரூ.223.91 கோடி மதிப்பிலும் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.