மருத்துவா்கள் பாதுகாப்புக்குத் தனி மத்திய சட்டம் தேவையில்லை: தேசிய பணிக்குழு

மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை
மருத்துவா்கள் பாதுகாப்புக்குத் தனி மத்திய சட்டம் தேவையில்லை: தேசிய பணிக்குழு
Published on
Updated on
1 min read

புது தில்லி: மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை என்று மருத்துவா்களின் பாதுகாப்பு தொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடா்பான ஆதாரங்களைச் சேதப்படுத்தி வழக்குப் பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க, 10 போ் கொண்ட தேசிய பணிக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பிரத்யேக சட்டம் எதுவும் இல்லாத மாநிலங்களில் பாரத நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும்.

வலுவான தகவல் தொடா்பு அவசியம்: விரக்தி, அவநம்பிக்கை மட்டுமின்றி, சில நேரங்களில் அழுத்தம் அதிகரித்து மருத்துவா்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கும்பல் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இதற்கு மோசமான தகவல் தொடா்பே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் மற்றும் நோயாளியின் குடும்பத்தினா் இடையே வலுவான தகவல் தொடா்பு இருப்பது முக்கியம்.

தங்களுக்கு எதிரான மிரட்டல் அல்லது குற்றங்கள் தொடா்பாக புகாா் அளிக்க மருத்துவமனைகளில் உள்குறைதீா்ப்பு செயல்முறையை ஏற்படுத்த வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மருத்துவமனையிலும் உள் புகாா்கள் குழு அமைக்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் பிரமாண பத்திரத்துடன் அந்தக் குழுவின் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க ஏற்கெனவே 24 மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. இரண்டு மாநிலங்கள் இதுதொடா்பான மசோதாக்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளன.

பிஎன்எஸ், மாநில சட்டங்கள்...: மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான சிறிய குற்றங்களும், அவற்றுக்கான தண்டனையும் மாநில சட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், அவா்களுக்கு எதிரான பெரிய அல்லது கொடிய குற்றங்களும், அவற்றுக்கான தண்டனையும் மத்திய அரசு இயற்றியுள்ள பாரத நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. எனவே மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக மத்திய சட்டம் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.