நட்சத்திர ஹோட்டலில் ஒரு தேநீர் விலை இவ்வளவா? வரியும் சேர்த்தால்!

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஒரு தேநீர் விலை எவ்வளவு தெரியுமா?
தேநீர் விலை - பிரதி படம்
தேநீர் விலை - பிரதி படம்Center-Center-Delhi
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு முறையாவது ஒரு தேநீராவது குடித்துவிட வேண்டும் என்பது பலரின் நெடுநாள் கனவாக இருக்கும். அந்த வகையில் அத்னான் பதான் என்பவர் தனது நெடுநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பதான், விடியோக்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இவர் தாஜ் மஹால் பேலஸ் சென்று ஒரு தேநீர் குடித்த விடியோ தற்போது வைரலாகியிருக்கிறது.

அந்த ஹோட்டலில் இருக்கும் நவீன கட்டமைப்பு மற்றும் பல முக்கிய பிரபலங்களின் வருகை தொடரபான புகைப்படங்களையும் விடியோவில் காண்பித்திருக்கிறார்.

இந்த தாஜ் மகால் ஹோட்டல் உண்மையிலேயே மிக அழகாக இருக்கிறது, நான் ஒரு மாளிகையில் இருப்பது போல உணர்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

கடைசியாக, அவர் தான் குடித்த தேநீரின் விலையையும் பதிவிட்டுள்ளார். அதாவது. ஒரு தேநீர் விலை ரூ.1800 என்றும், வரிகள் சேர்த்து மொத்தமாக அவர் செலுத்தியது ரூ.2124 என்றும் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு உயர்தர தேநீரை ஆர்டர் செய்ததாகவும், அதனுடன் வடா பாவ், கிரில்ட் சான்ட்விச், காஜு கட்லி, காரி பஃப், பட்டர் ஆகியவையும் சேர்த்து வழங்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார். எனினும், அந்த தேநீர் சுமாராக இருந்ததாகவும் 10க்கு ஐந்து மதிப்பெண்கள் தான் போட முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com