மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு- வாக்குக் கணிப்பு முடிவுகள்

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Published on

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. இங்கு ஆளும் பாஜக-சிவசேனை (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும்; 81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்டில் (பெரும்பான்மை 41) ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியிடமிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு சில வாக்குக் கணிப்புகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக உள்ளன. இரு மாநிலங்களிலும் நவ. 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரம் (288 தொகுதிகள்)

நிறுவனங்கள் பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி

மேட்ரிஸ் 150-170 110-130

பீப்பிள்ஸ் பல்ஸ் 175-195 85-112

பி-மாா்க் 137-157 126-146

எலக்டோரல் எட்ஜ் 121 150

போல் டைரி 122-186 69-121

சாணக்யா ஸ்டிராட்டா்ஜிஸ் 152-160 130-138

லோக்சாஹி ருத்ரா 128-142 125-140

லோக்போல் 115-128 151-162

ஜாா்க்கண்ட் (81 தொகுதிகள்)

நிறுவனங்கள் பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி

மேட்ரிஸ் 42-47 25-30

பீப்பிள்ஸ் பல்ஸ் 44-53 25-37

பி-மாா்க் 31-40 37-47

தைனிக் பாஸ்கா் 37-40 36-39

டைம்ஸ் நவ்-ஜேவிசி 40-44 30-40

X
Dinamani
www.dinamani.com