பாபா சித்திக்
பாபா சித்திக்ANI

முக்கிய சதிகாரர்களுடன் பாபா சித்திக் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி?

முக்கிய சதிகாரர்களுடன் பாபா சித்திக் கொலையாளி தொடர்புகொண்டது பற்றிய தகவல்.
Published on

புது தில்லி: மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முக்கிய சதிகாரர்களுடன் கொலையாளி தொடர்புகொண்டது எப்படி என்ற தகவல் வெளிவந்துள்ளது.

குற்றவியல் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், கைது செய்யப்பட்டிருக்கும் கொலையாளி ஆகாஷ் தீப் கில் என்பவர், தொழிலாளர்களின் ஹாட்ஸ்பாட்களைப் பயன்படுத்தி மற்றவர்களுடன் பேசி வந்தது தெரிய வந்துள்ளது. தன்னுடன் இருந்த தொழிலாளி பல்விந்தரின் ஹாட்ஸ்பாட் மூலம் மற்றவர்களுடன் பேசி வந்த கில், கொலைக்குப் பிறகு, பல்விந்தரை எப்போதும் ஆஃப்லைனில் இருக்குமாறும் அறிவுறுத்தியிருந்ததும் ஏஎன்ஐ செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.

பல்விந்தர் என்ற தொழிலாளியின் ஹாட்ஸ்பாட்டை, கொலைச் சதிக்குப் பயன்படுத்தியதை பல்விந்தர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை காவல்துறையினர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதால், ஆஃப்லைனில் இருக்குமாறு கூறியிருக்கிறார். தற்போது கில் பயன்படுத்திய செல்போனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த வழக்கில், கில்லின் செல்போன்தான் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் கில் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில், சிறையில் இருக்கும் மிகப்பெரிய ரௌடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் பிஷ்னோய், முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com