ஜம்மு-காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை செயலிழக்கச் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் புல்புர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பழைய கண்ணிவெடியை கண்டுபிடித்தனர்.
பின்னர் அதை பத்திரமாக பாதுகாத்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அந்த கண்ணிவெடியை வெள்ளிக்கிழமை வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயலிழக்கச் செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது கண்ணிவெடி மூலம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.