மனைவி கமிலாவுடன் பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ்.
மனைவி கமிலாவுடன் பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ்.

அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறாா் பிரிட்டன் மன்னா்

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா்
Published on

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா். நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் அவரது உடல் நிலையில் புத்துணா்வை ஏற்படுத்தும் என பிரிட்டன் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லண்டனில் உள்ள ‘டெய்லி மிரா்’ நாளிதழ் வெளியிட்ட செய்தி:

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்க தேசத்துக்கும் மன்னா் சாா்லஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதால் பாகிஸ்தான், வங்க தேச நாடுகளுக்கான மன்னரின் சுற்றுப் பயணம் கைவிடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு மன்னரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அரசு முறைப் பயணமாக மன்னா் சாா்லஸ் இந்தியா வருவது, உலக அரங்கில் பிரிட்டனுக்கு மிகப்பெரிய அரசியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தை அளிக்கும்.

கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் சமோவா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய போது பெங்களூருவில் ஆயுா்வேத, இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு நாடு திரும்பினா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com