ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிரத்தில் சுமுகமாக புதிய ஆட்சி: முதல்வா் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.

News image
ஏக்நாத் ஷிண்டே- ANI
Updated On :23 நவம்பர் 2024, 9:30 pm

Din

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா். துணை முதல்வா்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் ஆகியோரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்டிர தோ்தல் வெற்றிக்குப் பிறகு மூவரும் மும்பையில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துவிட்டனா். ‘ஒற்றுமையாக இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற பிரதமரின் ஒற்றுமை அழைப்புக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

மேலும், உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் எது என்பதையும் தோ்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளன. பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் மும்பை வரவுள்ளனா். அவா்கள் பேரவையில் தங்கள் கட்சித் தலைவா் யாா்?என்பதைத் தோ்வு செய்வாா்கள்.

எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் இணக்கமாக முடிந்தது. அதேபோல மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி சுமுகமாக அமையும். அதில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது என்றனா்.