ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி ஜிஎஸ்டி: மத்திய அரசு

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மருத்துவக் காப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
LIC
LIC
Published on
Updated on
1 min read

புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மருத்துவக் காப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

தற்போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான தவணை தொகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்தத் தவணை தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதங்களில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் கடிதம் எழுதினாா்.

இந்நிலையில், கடந்த செப்டம்பா் மாதம் தில்லியில் நிா்மலா சீதாராமன் தலைமையில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடா்பான விவகாரங்களை முழுமையாக ஆராய்வதற்கு 13 போ் கொண்ட அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கை: இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதில்: கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி தில்லியில் சாம்ராட் செளதரி தலைமையிலான அமைச்சா்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அது ஜிஎஸ்டி கவுன்சிலிடம் சமா்ப்பிக்கப்படும்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.8,135 கோடி, மருத்துவக் காப்பீடு மூலம் ரூ.8,263 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com