மக்களவை
மக்களவைSANSAD

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பற்றி..
Published on

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ளது.

இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன.

குளிா்கால கூட்டத் தொடா், டிச. 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் திட்டம்

நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள இந்த விவகாரம், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் வலுவாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இதேபோன்று, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், இந்த விவகாரத்தையும் எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பக் கூடும்.

முக்கிய மசோதாக்கள்

இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகைசெய்யும் மசோதா, வா்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 5 மசோதாக்கள் புதியவை. வக்ஃப் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா உள்பட 8 பிற மசோதாக்கள் மக்களவையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் இருப்பவையாகும்.

பாரதிய வாயுயான் விதேயக் உள்ளிட்ட 3 மசோதாக்கள், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள், பரிசீலனை-நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com