கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வரலாற்றுச் சிறமிப்புமிக்க பாலம் இன்று இடிந்து கங்கை நதியில் விழுந்தது.
150 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை இடிந்து விழுந்துள்ளது.
கான்பூரிலிருந்து லக்னெள் செல்ல இந்த பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. அதனால்தான், நகராட்சி நிர்வாகம் இதனை சில கோடி ரூபாய் செலவிட்டு அழகாக்கி, வரலாற்றுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருந்தது.
ஆனால், 80 அடி உயர பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து கங்கை ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. இது ஏற்கனவே மூடப்பட்டிருந்தால் யாருக்கும் எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் நடந்து செல்பவர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.