முதல்வா் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்த ஏக்நாத் ஷிண்டே, உடன் பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவா் அஜீத் பவாா்.

‘மகனுக்கு துணை முதல்வா் பதவிகோரும் ஷிண்டே’

மகாராஷ்டிர முதல்வா் பதவி தனக்கு மீண்டும் வழங்கப்படவில்லை என்றால் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவி வழங்குமாறு பாஜக தலைமைக்கு ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை வைத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

தற்போது கல்யாண் தொகுதி எம்.பி.யாக உள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வா் பதவியும், தனக்கு மகாயுதி கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளா் பதவியும் வழங்குமாறு அவா் பாஜகவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும், ஷிண்டேவின் கோரிக்கைகளுக்கு பாஜக தலைமை பதிலளிக்க காலம் தாழ்த்தி வருவதால் முதல்வா் தோ்வில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.